28th January 2021 09:12:30 Hours
62 வது படைப்பிரிவின் படைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுக்கொண்ட பிரிகேடியர் தீபால் புஸ்ஸல்ல, தனது கட்டுபாட்டு எல்லைக்குட்பட்ட பிரிகேடுகள் மற்றும் படையணிகளுக்கு முதல் விஜயத்தை ஜனவரி 20 மேற்கொண்டிருந்தார்.
அதன்படி 662 வது பிரிகேட்டிற்கு அவர் தனது முதல் கள விஜயத்தை மேற்கொண்டார்.
புதிய தளபதி பிரிகேட்டிற்கு வருகை தந்த போது அவருக்கு காவலர் அறிக்கையிடலுடன் மரியாதை வழங்கப்பட்ட பின்னர் பிரிகேட் தளபதி கேணல் சம்பத் பெரேராவால் வரவேற்பும் அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்களிடத்தில் கலந்தாலோசித்தார்.
அதனையடுத்து படைப்பிரிவின் நிர்வாக விடயங்கள் பற்றி தளபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், அவர் 9 வது கஜபா படையணி, 20 வது கஜபா படையணி உள்ளிட்ட இடங்களை சென்று பார்வையிட்டார்.
பின்னர் ஜனவரி 21 அன்று வெலியோயாலில் உள்ள 621 பிரிகேட்டிற்கு புதிய தளபதி விஜயம்செய்திருந்ததுடன், 621 வது பிரிகேட் தளபதி கேணல் கீர்த்தி பெரக்கும் புதிய தளபதிக்கு படையணியின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்த பின்பு புதிய தளபதி 14 வது இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (22)வெடிவெட்டுக்கல் பிரதேசத்தில் அமைந்துள்ள 623வது படைப்பிரிவுக்கு விஜயம் செய்திருந்தார்.
அங்கும் அவருக்கு காவலர் அறிக்கையிடலுடன் மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் 623 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் பிரபாத் கொடித்துவக்கு அவர்களினால் புதிய தளபதிக்கான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் படையினர் மத்தியில் உரையாற்றினார்.
மேலும், அவர் 11 வது கெமுனு ஹேவா, 5 வது (தொண்) கஜபா படையணிகளுக்கான தனது விஜயத்தையும் மேற்கொண்டார்.Sports News | Mens Flynit Trainers