Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2021 10:12:30 Hours

213 வது பிரிகேடின் படையினரால் வறுமையான குடும்பத்துக்கு புதிய வீடு

மஹாவிலாச்சிய பகுதியில் நவோதக கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வறுமையான குடும்பமொன்றுக்கு அவசியமான வீடொன்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 213 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ரஸிக குமார தலைமையில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது.

இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினரால், இப்பகுதியிலுள்ள நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட உள்ளதுடன், ஜனக செனரத் பண்டார என்பவரின் குடும்பத்துக்கே இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஜனக ஒரு சுய தொழிலாளியாக இருந்த போதும் கொவிட் – 19 வைரஸ் பரவல் நிலைமை காரணமாக அவருடைய குடும்பம் வறுமையில் வாடுவதை கருத்தில் கொண்டே இந்த வீடூ நிர்மாணிக்கப்பட உள்ளது.

இந்த சமூகத் திட்டமானது, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 21 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் எண்ணக்கருவின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை இலேசாயுத காலாட் படையின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரி மேஜர் எச்.எம்.ஜே பிரேமதிலக, 213 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மேஜர் ஈ.டி.எஸ்.கே. தெனியாய, ஏனைய அதிகாரிகள், சிப்பாய்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.Nike shoes | nike fashion