28th January 2021 14:49:41 Hours
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா , அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, தேசிய புலனாய்வுத்துறையின், பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு), ருவான் குலதுங்க , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளைப் பிரதானி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர,தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஸ் நாயக்கார, இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரொபின் ஜயசூரிய மற்றும் கட்டிடக் கலை கலைஞர்கள்,தொல்பொருள் ஆய்வாளர்கள், கட்டிட களைஞர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள், பொறியலாளர்கள், அளவையியலாளர்கள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (26) தீகவாபிக்கு விஜயம் செய்து அங்கு அங்குள்ள தூபியின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
இதன் போது தீகவாபி தூபியை மீள கட்டமைப்பதற்கு 30000 தரமான செங்கட்கள் அவசியப்படும் என்பதோடு, அவற்றை சிவில் பாதுகாப்பு படையணியினர் உற்பத்தி செய்யவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். அதேநேரம் தூபிகளை அதன் கடந்த கால பழைமை மற்றும் மகிமையும் பாதிக்கப்படாத வண்ணம் தூபியை மறுசீரபைப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதுடன், இந்த உன்னதமான பணிக்கு பங்களிப்பை செய்ய விரும்புவோர் கைகொடுக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இத்திட்டமானது மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும், இதற்காக நன்கொடையாளர்கள் வழங்கும் நிதி உதவிகள் வெளிப்படைத் தன்மை மிக்கதான பதிவுகளுடன் வங்கிக் கணக்கொன்றின் ஊடாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தீகவாபி விகாரையின் விகாராதிபதி மஹா ஓயா சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், சிவில் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். Adidas footwear | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf