Header

Sri Lanka Army

Defender of the Nation

27th January 2021 12:30:30 Hours

மேலும் இரண்டு கொவிட் – 19 மரணங்கள் பதிவு

இன்று (28) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 772 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 30 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஏனைய 742 பேரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 189 ஆகும். அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 178 பேர், களுத்துறை மாவட்டத்தில் 93 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 282 பேர் ஆவர் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (28) காலை வரை நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 60, 693 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 53,697 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியைச் சேர்ந்வர்காளவர். 52,565 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 7,838 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமிரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (28) 1,520 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரு மரணங்கள் பதிவாகியிருந்ததுடன், கோனபொல ,கொழும்பு 15 பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்ததுள்ளனர். அதன்படி இன்று (28) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களிள் மொத்த எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், இன்று காலை (28) நிலவரப்படி, முப்படையினரினால் நிர்வகிக்கப்படும் 97 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 8,252 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (27) 15,259 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.buy footwear | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth