28th January 2021 11:12:38 Hours
72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பாலாலியில் உயிர்நீத்த இந்திய அமைதிகாக்கும் படை வீரர்களை நினைவுகூர்ந்து செவ்வாய்கிழமை 26 ஆம் திகதி இடம்பெற்ற அவர்களது நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் திரு எஸ்.பாலச்சந்திரன் மற்றும் மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இணைந்து மேற்படி உயிர் நீத்த இந்திய அமைதிகாக்கும் படை வீரர்களின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘ஒபரேஷன் பவன்’ என்ற பேரில் இடம்பெற்ற அமைதிகாக்கும் பணிகளின் போதே இந்திய இராணுவத்தின் 10 வது பரா கொமாண்டோ படையணியின் குறிப்பிட்ட சில போர் வீரர்கள் உயிர்நீத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவுக்கூறல் நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூரகத்தின் அதிகாரிகள், இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். Asics footwear | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat