Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2021 14:45:12 Hours

புதிதாக பதவியுயர்வுபெற்ற மூன்று மேஜர் ஜெனரல்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

புதிதாக பதவி உயர்வு பெற்றுக்கொண்ட 3 மேஜர் ஜெனரல்களான, 65 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திஸாநாயக்க, 59 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் லமாஹேவா மற்றும் 64 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வானது பணாகொடையில் உள்ள பீரங்கி படையின் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி வியாழக்கிழமை (19) இடம்பெற்றது.

இதன்போது இராணுவ சம்பிரதாய முறைமைகளுக்கு அமைய தலைமையக வளகாத்தில் புதிதாக பதவியுயர்வுபெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு காவலர் அறிக்கையிடலுடன் மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொடவால் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் ஏனைய அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்கள் சார்பில் அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விற்கு பின்னர் மதிய விருந்துபசாரம் ஒன்றும் இடம் பெற்றதுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

நிகழ்வின் நிறைவில் புதிதாக பதவி உயர்வு பெற்ற மூன்று மேஜர் ஜெனரல்களும் தங்களது பதவி உயர்வுக்கு வழி வகுத்தற்கு சகலரும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொண்டனர்.Nike sneakers | Air Jordan