Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2021 15:04:12 Hours

சிங்கப் படையின் 'எல்சா’ சிங்கம் அதன் மூன்றாம் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியது

அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படை தலைமையகத்தில் அன்புச் சின்னமாக பராமரித்து வளர்கப்படும் சிங்க படையின் “எல்ஸா” சிங்கக் குட்டிக்கு 3 வது பிறந்தநாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (22) கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் தின நிகழ்வு கொண்டாட்டத்தில் இலங்கை சிங்க படையின் நிலையத் தளபதி பிரகேடியர் தம்மிக்க திஸாநாயக்க மற்றும் தலைமையகத்தின் அதிகாரிகள் , சிப்பாய்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

வழமை போன்று ஐசிங்,கோதுமை,சீனி கொண்ட கேக்கிற்கு பதிலாக 2 அடி உயரமான இறைச்சித் துண்டுகளால் உருவாக்கப்பட்ட கேக் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்பட்டு சிங்கக் குட்டியின் முன்னாள் வைக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். அதனையடுத்து இந்த பிறந்த தின கேக்கினை சிங்க படையின் நிலையத் தளபதி பிரகேடியர் தம்மிக்க திஸாநாயக்க வெட்டிய பின்னர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிங்க குட்டிக்கு வாழ்த்துக்களை கூறி இறைச்சித் துண்டுகளை வழங்கினர்.

அதனையடுத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் விலங்குகிக்கு இறைச்சி உணவுகளை வழங்குவதன் மூலம் பிறந்த நாள் விழா சிறப்பிக்கப்பட்டது. Running Sneakers | Yeezy Boost 350 Trainers