Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2021 13:25:41 Hours

கிழக்கு படைத் தலைமையகத்தின் புதிய தளபதி பதவியேற்பு

வெலிகந்தவில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய பதவியேற்றுக்கொண்டார்.

அவர் மத அனுட்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாய பூர்வமான மரியாதையுடன் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய தலைவர் பாதுகாப்பு படையின் தலைமையக வளாகத்துக்கு வருகைத் தந்த போது அவருக்கு காவலர் அறிக்கையிடலுடன் மரியாதை செலுத்தப்பட்டதுடன், பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் உபாலி குணசேகர, பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம் பிரிகேடியர் ஶ்ரீநாத் திசாநாயக்க ஆகியோரும் வரவேற்றனர்.

அதனையடுத்து 15 ஆவது காலாட் படைப்பிரிவினரால் அணிவகுப்பு மரியாதைகளும் செலுத்தப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் புதிய தளபதி உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் இதன் போது மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் நல்ல நேரத்தில் பதவியேற்புக்கான ஆவணங்களில் கைசாத்திட்டார்.

அதனையடுத்து, தலைமையக வளாகத்தில் தனது பதவியேற்பின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார்.

பின்னர் தளபதிகள், ஏனைய பதவி நிலை சிப்பாய்களின் முன்னிலையில் உரையாற்றிய அவர் , தனது அடுத்த கட்ட பணிகள் தொடர்பிலான நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து 22,23,24வது படைப்பிரினருடன் சுமூகமான கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

இவர் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாக பதவியேற்கும் முன்னர், 22 காலாட் படைப்பிரிவின் அதிகாரி கட்டளைத் தளபதியாக பணியாற்றியிருந்தார். best Running shoes brand | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival