25th January 2021 22:00:00 Hours
இராணுவத்தின் 34 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 20 வது தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே ஞாயிற்றுக்கிழமை (24) வெலிகந்தவிலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்திலிருந்து விடைப்பெற்றுச் சென்றார்.
ஓய்வு பெற்றுச் செல்கின்ற கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதிக்கு இதன் போது சம்பிரதாயபூர்வமாக 15வது இலேசாயுத காலாட் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி வைத்து படைகளுக்கு சிறப்புரை ஆற்றிய அவர், தனது காலத்தில் எதிர்பார்த்த இலக்குகளை அடைய படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். அதேபோல் அனைத்து மட்டங்களிலும் ஒழுக்கத்தை முறையாக கடைப்பிடிப்பதன் அவசியத்தையும் இராணுவத்தின் நன்மதிப்பை பாதுகாக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் சிறப்பாகவும் திறமையாகவும் செயற்பட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவருடைய சேவையை பாராட்டும் வகையில் பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் உபாலி குணசேகர, பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம் பிரிகேடியர் ஶ்ரீநாத் திசாநாயக்க ஆகியோரால் நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
அதனையடுத்து வெலிகந்தை முகாமிலிருந்து விடைப்பெற்றுச் சென்ற முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே தனது கட்டுப்பாட்டின் கீழிருந்த அமைப்புகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்துடன் அங்கும் அவருக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள படைகளின் சேவையை பாராட்டிய அவர், எதிர்காலத்தில் அவர்களுடைய சேவைகளை திறம்பட முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார். trace affiliate link | Women's Designer Sneakers - Luxury Shopping