25th January 2021 09:45:07 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார வவுனியா மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு விஜயம் செய்வதற்கு முன்பதாக செவ்வாய்க்கிழமை (19) வவுனியா மாவட்டச் செயலாளரை சந்தித்து அம் மாவட்டத்தின் கொவிட் – 19 பரவல் தொடர்பாக நிலைமைகளை கேட்டறிந்துக் கொண்டார்.
கொவிட் – 19 கட்டுப்பாட்டுக்கான பிரதம ஒருங்கிணைப்பாளராக என்ற வகையில் வவுனியா மாவட்ட செயலாளருடனான சந்திப்பின் பின்னர் வன்னி, பூந்தோட்டம், பெரியக்காடு, பம்பைமடு ஆகிய பிரதேசங்களில் இருக்கின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு விஜயம செய்தார். .
வன்னி படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி, சிரேஸ்ட அதிகாரிகள், 562 மற்றும் 563 பிரிகேட்களின் சிரேஸ்ட அதிகாரிகள், அலகு கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர். best Running shoes brand | adidas Yeezy Boost 350