25th January 2021 16:49:12 Hours
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக ஹெவெஸ்ஸ ஆரம்ப பாடசாலை மைதானம் , யடபாத்த ஆரம்ப பாடசாலை மைதானம் மற்றும் வெல்லவிட்ட மதுகம 07ம் கட்டை பொது மைதானம் என்பன பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலில் சீரமைக்கும் பணிகள் இலங்கை பொறியியல் சேவை படையினரால், 10 மணிநேரத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டன.
மத்துகமவில் இடம்பெற்ற கிராமத்துடனான சுமூக சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை (23) பங்கேற்ற ஜனாதிபதியிடம் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் பிரகாரம் மேற்படி பணிகள் ஜனாதிபதியால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கமைய, அடுத்த 10 மணிநேரத்திற்குள் மைதானத்தை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதம கள பொறியாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர விடுத்த கட்டளையின் பிரகாரம் 5 வது கள பொறியியல் படையின் இயந்திரங்கள்,மனித வளம் மற்றும் தொழில்நுட்பகளை கொண்டு இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. url clone | Jordan Ανδρικά • Summer SALE έως -50%