22nd January 2021 15:42:24 Hours
பனாகொடையிலுள்ள பீரங்கி படையின் தலைமையக வளாகத்தில் உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் கேட்போர்கூடத்தினை நிர்மாணிப்பதற்காக பீரங்கி படைப்பிரிவின் படைத் தளபதியும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவினால் புதன்கிழமை (20) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அதன்படி நீண்டகால தேவையாக கருதப்பட்டு வந்த குறித்த திட்டத்திற்கான அடிக்கல் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் நாட்டிவைக்கப்பட்டது.
இவ் விழாவில் பனாகொடையிலுள்ள படைப்பிரிவுத் தலைமையகத்தின் நிலையத் தளபதி, பிரதி நிலையத் தளபதி, மூத்த அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்களும் கலந்து கொண்டிருந்தனர். Mysneakers | Mens Flynit Trainers