23rd January 2021 08:34:19 Hours
34 வருட சேவைக்காலத்தை திறம்பட பூர்த்தி செய்துக்கொண்டு ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கை பீரங்கி படையின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாந்த ஹேவாவிதாரன அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது புதன்கிழமை (20) பனாகொடையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியும் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொடவும் இந்த பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதம அதிதியை சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றதுடன் அவர் போரினால் உயிரிழந்த படை வீரர்களின் நினைவுத்தூபிகளுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனையடுத்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரிக்கு பீரங்கிப் படையினரின் படை வீரர்களால் காவலர் அறிக்கையிடல் மற்றும் மரியாதை வழங்கப்பட்டதுடன், வொரண்ட் அதிகாரிகள் சார்ஜன்ட்களுக்கான விருந்தகத்தில் தேநீர் விருந்தொன்றும் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் சாந்த ஹேவாவிதாரன ஏனைய இராணுவச் சிப்பாய்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அன்றைய தினம் மாலை நேரத்தில் அதிகாரிகளுக்கான விருந்தகத்தில் இடமபெற்ற விருந்துபசாரத்துடன் பிரியாவிடை நிகழ்வு நிறைவு கண்டதுடன், ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரிக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. Sports News | Air Max