22nd January 2021 15:50:24 Hours
இன்று (24) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 644 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன் அவர்கள் சகலரும் உள்நாட்டவர்கள் என கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவாக் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆகும். அதேநேரம் கண்டி மாவட்டத்தில் 110 பேர், கம்பஹா மாவட்டத்தில் 106 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 311 பேருக்கும் கொவிட;-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (24) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 57,586 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் குணமடைந்துள்ள 49,260 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 8,046 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரு மரணங்கள் பதிவாகியிருந்ததுடன், கல்கிசை, ரணால பிரதேசங்களை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். அதன்படி இன்று காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களிள் மொத்த எண்ணிக்கை 280 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இன்று (24) காலை 644 நோயளிகள் முழுமையாக குணமடைந்து வைத்தியசலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் இன்று காலை (24) நிலவரப்படி, முப்படையினரின் கீழ் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற 91 தனிமைப்படுத்தல் மையங்களில் 8117 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (23) 18,515 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. Authentic Nike Sneakers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify