22nd January 2021 15:40:24 Hours
இலங்கை இராணுவத்தின் 8 வது தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அஸோக பீரிஸ் அவர்கள் (22) வெள்ளிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஶ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையகத்தில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் புத்தருக்கு வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மகா சங்கத்தினரின் பிரித் பாராயாணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஸ்ட அதிகாரிகளும், இராணுவ சிப்பாய்களும் மேஜர் ஜெனரல் அஸோக பீரிஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேஜர் ஜெனரால் அஸோக பீரிஸ் மேற்படி பதவி நிலைக்கு நியமிக்கப்படும் முன்பாக, இராணுவத் தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதுடன் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அதீப திலகரட்ன இந்த பதவி நிலையை வகித்தமை குறிப்பிடத்தக்கது. Mysneakers | adidas NMD Human Race