Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd January 2021 10:17:20 Hours

விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கான சில்க் ஸ்போர்ட்ஸ் -2020' விருது இலங்கை இராணுவத்துக்கு

விளையாட்டுத் துறையில் திறமை மிக்க வீரர்களை ஊக்குவித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்கின்றமைக்கான 6 வது சில்க் ஸ்போர்ட்ஸ் -2020' விருது இலங்கை இராணுவத்திற்கு நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

SPORTSINFO என்ற தொலைக்காட்சி சேவையினால் ஏற்பாடுசெய்யப்பட்டியிருந்த விருது வழங்கள் நிகழ்வொன்றிலேயே இலங்கை இராணுவத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இலங்கை இராணுவத்துக்கு இந்த தேர்வு வழங்கப்பட்மைக்காக தேசிய விளையாட்டுத் தேர்வு குழுவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா மேற்படி தொலைக்காட்சி சேவைக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

அதேநேரம், இவ்வாறான வீர்ர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி நாட்டுக்காக பதக்கங்களை வென்றெடுக்க அவர்களை இராணுவம் தயார்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

‘’இது தொடர்பாக கருத்து தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா 6 வது சில்க் ஸ்போர்ட்ஸ் விருதை இலங்கை இராணுவத்துக்கு வழங்கியதற்காக நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாறான விருது இலங்கை இராணுவத்துக்கு ஊக்விப்பாக அமைந்துள்ளது என்றும். திரைக்கு பின்னால் நிற்காத வீரர்கள் என்ற வகையில், இலங்கை இராணுவம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்க பெரும் பங்களிப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். அதனூடாக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை உருவாக்கிய பெருமையும் இலங்கை இராணுவத்திற்கு மாத்திரமே உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதேபோல் தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவர் என்ற வகையில் இலங்கை இராணுவம் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டிருப்பதை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இராணுவ தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் வீரர்கள் தெற்காசிய மற்றும் ஒலிம்பிக் , பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது இலங்கையிலுள்ள சகல வீரர்கள் , வீராங்கனைகளுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றும், இந்த விடயத்தில் இலங்கை இராணுவம் நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், பயிற்சிளை வழங்கள், திறமை மிக்கவர்களுக்கு இராணுவ வசதிகளை வழங்குதல் மற்றும் பயிற்சி அமர்வுகளை நடத்துதல் உள்ளிட்ட பங்களிப்புகளையும் செய்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

அதனால், 6 வது சில்க் ஸ்போர்ட்ஸ் விருதுகள் இராணுவத்தின் திறமை மேம்பாட்டுக்கும் பங்களிப்புச் செய்யம் என்பதுடன், இராணுவம் இலங்கையின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கும் பங்களிப்புச் செய்தமைக்காகவும் திறமையானவர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்கும் SPORTSINFO மற்றும் 6 அவது சில்க் ஸ்போர்ட்ஸ் 2020 விருது வழங்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். Nike Sneakers | Nike News