23rd January 2021 16:34:19 Hours
தனியார் துறை நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் நலன்புரி வியாபார நிலையங்களுக்கு அருகில் ஹைட்ராஞ்ஜியா மலர் செடிகளை வளர்க்கும் திட்டத்தினை விரிவுபடுத்தும் செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ கல்லூரிக்கு அண்மையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்ஸனுடன் விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரபல்யமான இந்த மலர் உற்பத்தியை விரிவுப்படுத்தற்கு இருக்கின்ற சாத்தியக்கூறுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போது வரையறுக்கப்பட்ட ஹேலிய்ஸ் தனியார் விவசாய நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் இலங்கை இராணுவ கல்லூரி வளாகம், மத்திய பாதுபாப்பு படைத் தலைமையக வளாகம், ஆகியவற்றில் விரிவுபடுத்துவதற்கு காணப்படுகின்ற சாத்தியகூறுகள் பற்றி ஆராய்ந்தனர்.
அதன் பின்னர் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு அவசியமான உதவிகளை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன அவர்கள் வழங்கியதுடன் ஹேலிய்ஸ் தனியார் விவசாய நிறுவனத்தின் முகாமையாளர் (செயற்பாடு) அர்ஜுன பாலசூரிய மற்றும் அந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் தலைவர் உதய பிரபாத் ,பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள் பிரிவின் பிரிகேடியர் சரத் தென்னகோன் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். spy offers | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD