21st January 2021 22:15:56 Hours
கல்னேவவிலுள்ள 533 வது பிரகேடின் 26 ஆவது புதிய தளபதியாக பிரிகேடியர் சுமித் நந்தன வியாழக்கிழமை (21) மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்றுக்கொண்டார்.
புதிய தளபதி தலைமையகத்தின் நுழைவாயில் வைத்து காவலர் அறிக்கையிடலுடன் கெளரவிக்கப்பட்டார்.
பின்னர், பிரிகேடியர் சுமித் நந்தன புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டார்.
அதனையடுத்து தலைமையக வளாகத்தில் மரக் கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் படையினர் மத்தியில் உரையொன்றையும் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பிரிகெட் படைப் பிரிவின் கீழ் சேவையாற்றும் கட்டளை அதிகாரிகள் , பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். jordan release date | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp