21st January 2021 13:50:18 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் திங்களன்று (18) மன்னாரிலுள்ள 54 வது படைப் பிரிவு தலைமையகம் மற்றும் அதன் பிரிவுத் தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை 54 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார அவர்கள் வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து, அவர் வளாகத்தில் ஒரு மா மரக்கன்றினை நட்டார், மேலும் அனைத்து அதிகாரிகளும் வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தளபதியுடன் இணைந்து ஒரு குழு புகைப்படத்தில் கலந்து கொண்டனர்.அந்தந்த தளபதிகள் விரிவான விளக்கங்களை தளபதிக்கு வழங்கியதுடன் அவர் 7 வது விஜயபாகு காலாட்படை படையணிக்கு விஜயம் செய்தார்.
மன்னார் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அவர் மன்னார் பேராயர் டொக்டர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களை மன்னார் பேராயர் இல்லத்தில் சந்தித்தார். பின்னர், வில்பத்து பகுதியில் 542 வது பிரிகேட் படைப்பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 மீ மரக்கன்றுகள் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாய்களின் பங்குபற்றுதலுடன் நடப்பட்டன.
இறுதியாக அவர் 542 வது காலாட்படை பிரிகேட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதுடன் , அங்கு 54 வது படைப் பிரிவு மற்றும் அதன் பிரிவு தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
54 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார,542 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுரேஷ் பெரேரா மற்றும் 543 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் இமால் அசலராச்சி மற்றும் 54 வது படைப் பிரிவின் கீழுள்ள கட்டளை அதிகாரிகள் குறித்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Yeezy Boost 350 Trainers