21st January 2021 18:10:18 Hours
ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கை சமிக்ஞை படையணியின் தலைமை சமிக்ஞை அதிகாரியான மேஜர் ஜெனரல் அதீப திலகரட்ன அவர்களுக்கு யாழ் பாலாலியில் உள்ள 3 வது இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) கௌரவ மரியாதையளிக்கப்பட்டது.
அங்கு சென்ற பிரதம அதிதியவர்களை கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் என்.பி.ஏ. மெண்டிஸ் அவர்கள் வரவேற்றதோடு, அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. பின்னர் அவர் உயிர் நீத்த படைவீர்ர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்நது அவர் படையினர் மத்தியில் உரையாற்றினார்.
பின்னர், கட்டளை அதிகாரி அனைத்து படையணியின் சார்பாக அவரின் சிறந்த சேவையைப் பாராட்டும் முகமாக அவருக்கு நினைவு சின்னத்தை வழங்கினார்.
தலைமை சமிக்ஞை அதிகாரி தனது இறுதி உத்தியோகபூர்வ வருகையை குறிக்கும் விதமாக ஒரு மரக்கன்றினை நட்டதுடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அனைத்து சமிக்ஞை அதிகாரிகளுடனும் இணைந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார். Running Sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp