Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2021 21:03:10 Hours

சிவில் பாதுபாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகத்திற்கு சிறப்பு வரவேற்பு

சிவில் பாதுபாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நன்தன சேனாதீரவுக்கு வரவேற்பளிக்க மொரட்டுவவில் உள்ள சிவில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இன்று (21) சிறப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.

புதிய பணிப்பாளர் நாயகம் தலைமையக வளாகத்துக்கு வருகை தந்தவுடன் அவருக்கு சிவில் பாதுகாப்பு படையினரால் சம்பிரதாய முறைப்படி மரியாதையளிக்கப்பட்டதுடன். அவர் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான ஆவணங்களில் கைச்சாத்திட்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் கொவிட-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் மற்றும் திருமதி ரேக்கா சேனாதீர குடும்ப உறுப்பினர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், நலன்விரும்பிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அபயாராம விகாரையின் விகாராதிபதி, முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பெல்லன்வில ரஜ மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரத்தன தேரர் ,வென் உடுவே தம்மாலோக தேரர் மற்றும் இரண்டு முக்கியமான தேரர்கள் ஆகிய மகா சங்கத்தின் பிரதான உறுப்பினர்களால் போதனைகளும் நிகழ்த்தப்பட்டது. best Running shoes | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth