21st January 2021 12:00:18 Hours
ஓய்வுபெற்ற படைக்லச் சிறப்பணியின் அதிகாரி கேணல் காமினி பாலசூரிய மற்றும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியினைக் கொண்டு சனிக்கிழமை (16) தி/ பரணமெதவாச்சிய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு ஏராளமான புத்தகங்கள் மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் 62 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த புத்தகங்கள் மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார். மேலும் குறித்த நிகழ்வானது அப்பகுதியில் உள்ள 622 வது பிரிகேட் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு இடம்பெற்ற நிகழ்வில் 622 வது பிரிகேட் தளபதி கேணல் சம்பத் பெர்னாண்டோ, பல சிரேஷ்ட அதிகாரிகள், 62 வது படைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர். Sportswear Design | Nike Air Max 270