22nd January 2021 15:03:24 Hours
பனாகொடயிலுள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவின் 7 வது பணிப்பாளராக கேணல் சாணக்க பிரதாபசிங்க அவர்கள் வியாழக்கிழமை (21) மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது புதிய பணிப்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களிலும் அவர் கையொப்பமிட்டார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவிருந்த மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் அண்மையில் தலைமை சமிக்ஞை அதாரியாகவும் இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்தே தகவல் தொழில்நுட்ப பிரிவின் புதிய பணிப்பாளராக கேணல் சாணக்க பிரதாபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Running sport media | Nike for Men