21st January 2021 19:50:18 Hours
இன்று (22) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 887 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 13 பேர் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஏனைய 873பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.இவர்களில் அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 337 ஆகும். அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 136 பேர், களுத்துறை மாவட்டத்தில் 71 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 327 பேருக்கும் கொவிட-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 56,075 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் குணமடைந்துள்ள 47,983 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 7,816 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரு மரணங்கள் பதிவாகியிருந்ததுடன், அத்துருகிரிய,பேலியகொடை பிரதேசங்களில் சேர்ந்தவர்களே உயிரிழந்திருந்ததுனர். அதன்படி இன்று காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களிள் மொத்த எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இன்று (22) காலை 769 நோயளிகள் முழுமையாக குணமடைந்து வைத்தியசலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் குவைட்டிலிருந்தும் கியூ.ஆர் 668 விமானத்தில் 28 பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து யூ.எல் 605 விமானத்தில் 14 பயணிகளும், ஜப்பானிலிருந்து யூ.எல்.544 விமானத்தில் 20 பயணிகளும் இன்று காலை 22 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர்.
அதேநேரம் ஜேர்மனியில் இருந்து யூ.எல் 554 விமானத்தில் 26 பேரும், மாலைத்தீவில் இருந்து யூ.எல் 102 விமானத்தில் 27 பேரும், இத்தாலியிலிருந்து யூ.எல் 1208 விமானத்தில் 52 பேரும், பங்களாதேஷில் இருந்து யூ.எல் 190 விமானத்தில் 41 பேரும், உக்ரேனிலிருந்து பி.கியூ 555 விமானத்தில் 106 பேரும், மலேசியாவிலிருந்து யூ.எல் 320 விமானத்தில் 22 பேரும், சீனாவிலிருந்து எம்.யூ 231 விமானத்தில் 54 பேரும், இந்தியாவிலிருந்து ஏ.யூ1273 விமானத்தில் 35 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஈ.கே 648 விமானத்தில் 648 பேரும், சிங்கப்பூரில் இருந்து எஸ். கியூ விமானத்தில் 21 பேரும் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதோடு அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்டும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இன்று காலை (22) நிலவரப்படி, முப்படையினரின் கீழ் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற 91 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 8173 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (21) 16,108 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. best shoes | balerínky