19th January 2021 18:30:57 Hours
66 வது படைப்பிரிவிலிருந்த விடைப்பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்குவிற்கு வியாழக்கிழமை (14) பூநகரியில் உள்ள 66 வது காலாட் படைத் தலைமையகத்தில் இராணுவ மரபுகளின்படி பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது விடைப்பெற்றுச் செல்லும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதனையடுத்து அவர் சேவையாற்றிய காலத்தில் அவருக்கு உதவிய சகலருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். மேலும் அவர் ஆணையிறவில் திருத்தி அமைக்கப்பட்ட சிற்றூண்டிச் சாலைமற்றும் காவலரண்யொன்றையும் திறந்து வைத்த அவர், ஞாபகார்த்த குழு படங்கள் எடுக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து விடைப்பெற்றுச் செல்லும் படைப்பிரிவு தளபதிக்கு பிரிகேட் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் அவரது விலைமதிப்பற்ற சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவு சின்னம் வழங்கி நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது. bridge media | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf