21st January 2021 22:53:03 Hours
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் , இராணுவத் தளபதியுமான கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் விஷேட மருத்துவ நிபுணரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் இன்று (20) காலை தனியார் துறையின் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூட முகாமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கான பொதுவான ஒழுங்குமுறை பொறிமுறையை அமல்படுத்துதல், இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆடைத் தொழில் ஊழியர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வோர், அந்தந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு இதுபோன்ற நடைமுறைகளின் 100% நம்பகத்தன்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அவற்றை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
சில தனியார் வைத்தியசாலைகள் பிராந்திய மற்றும் மினி ஆய்வு கூடங்களில் பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொள்வதற்கான அமைச்சின் அனுமதிகளை பெறப்படவில்லை என்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ள தொழில்நுட்ப ரீதியாக பொருத்தப்பட்ட 30 ஆய்வு கூடங்கள் மட்டுமே சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் சில பாதிக்கப்பட்ட தரப்பினரால் இதுபோன்ற சோதனைகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு சில நேரங்களில் முரண்பாடான முடிவுகள் கிடைத்துள்ளமை பற்றியும் ஆராயப்பட்டது.
அதேநேரம் நேற்று மட்டும், 18,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள போதும், தனியார் துறை கட்டணம், அதாவது முதலீட்டுச் சபை நிறுவன ஊழியர்களுக்கு ரூபாய் 6750 என்ற கட்டண அறவீடு மாறாமல் உள்ளது. இதுபோன்ற சோதனைகளுக்கான தற்போதைய விலை வரம்புகளை மக்களின் நலனுக்காக மேலும் குறைக்க முடிந்தால் அது மிகவும் நல்லது என்று சுட்டிக்காட்டிய ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
உக்ரேனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிச்சார்த்த திட்டமாக தனியார் துறை மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் சோதனைகளை நடத்த சுகாதார அதிகாரிகள் அனுமதி அளித்ததாகவும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார். டாக்டர் அசேல குணவர்தன அந்த உயர்மட்ட முகாமை தொழில்நுட்ப வல்லுநர்களிடம் நடைமுறைக்கான வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தவறான நடைமுறைகளை நாடாமல் சோதனை முறையின் நம்பகத்தன்மையை மிக உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், சுகாதாரத் துறை, மாவட்ட வைத்தியசாலைகளின் முக்கியஸ்தர்கள், பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராஜகிரிய கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் 10-12 ஆய்வு கூட அதிகாரிகள், தனியார் வைத்தியசாலை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். Sports brands | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov