19th January 2021 18:50:57 Hours
61 வது படைபபிரிவு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே பூசவில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (15) கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
முகாம் வளாகத்திற்கு வந்த அவருக்கு முறையான பாதகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்து. பின்னர் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதை அடையாளப்படுத்தினார்.
பின்னர் நிகழ்வின் ஞாபகார்த்தமாக வளாகத்தில் ஒரு மாங்கன்றினை நாட்டி வைத்தார். பின்னர் அனைத்து நிலைகளுக்கான உரையில் தனது கடமை மற்றும் வகிபாங்கு தொடர்பாக விளக்கினார்.
இவர் தற்போதைய நியமனத்திற்கு முன்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பதவியை வகித்தார். மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க இராணுவத் தலைமையகத்தில் நிறைவேற்று நிருவாக ஜெனரலாக பதவியேற்றதினை அடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
61 வது படைப்பிரிவின் கீழ் பணியாற்றும் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர். Sportswear free shipping | Nike Shoes