Header

Sri Lanka Army

Defender of the Nation

10th January 2021 17:30:47 Hours

இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதி வன்னி & வடக்கு படையினருடன் உரையாடல்

இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் 12 வது படைப் பிரிவின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் வெள்ளங்குளத்தில் அமைந்துள்ள 12 வது இலங்கை சிங்க படையணி, பெரியவாலயன்காடு வெள்ளங்குளத்தில் அமைந்துள்ள 15 வது (தொண்) இலங்கை சிங்க படையணி, கிளிநொச்சியில் அமைந்துள்ள 16 வது பட்டாலியன் இலங்கை சிங்க படையணி, போகஸ்வெவயில் அமைந்துள்ள 7 வது பட்டாலியன் இலங்கை சிங்க படையணி, ஓமந்தையில் அமைந்துள்ள 21 வது பட்டாலியன் இலங்கை சிங்க படையணி மற்றும் கொம்பவித்தி குலத்திலுள்ள 17 வது (தொண்) பட்டாலியன் இலங்கை சிங்க படையணி ஆகிய படையணிகளுக்கு ஜனவரி 07-09 ஆம் திகதிகளில் விஜயத்தை மேற்கொண்டார்.

12 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி. சில்வா அவர்கள் வரவேற்றார். அதன்பிறகு, அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, படையணியின் கட்டளை அதிகாரி அவருக்கு முறையான விளக்கத்தை வழங்கினார். படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் மரக்கன்றினை நட்டதோடு குழுபுகைகடத்திலும் கலந்து கொண்டார். பின்னர் அவர் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதோடு அதிதிகள் புத்தகத்தில் சில குறிப்புக்களை யும் எழுதினார்.

பின்னர் 15 வது(தொண்) இலங்கை சிங்க படையணிக்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை கட்டளை அதிகாரி மேஜர் அத்தநாயக்க அவர்கள் வரவேற்றார். அதன்பிறகு, அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, படையணியின் கட்டளை அதிகாரியினால் அவருக்கு முறையான விளக்கத்தை வழங்கினார். படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் மரக்கன்றினை நட்டதோடு குழுபுகைகடத்திலும் கலந்து கொண்டார் மேலும் முகாம் வளாகத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதோடு அதிதிகள் புத்தகத்தில் சில குறிப்புக்களையும் எழுதினார்.

அதேவேளை கிளிநொச்சியிலுள்ள 16வது இலங்கை சிங்க படையணி, 4 வது இலங்கை சிங்க படையணி முகாம், 9 வது இலங்கை சிங்க படையணி முகாம், மற்றும் 6 வது இலங்கை சிங்க படையணி முகாம் உள்ளிட்ட இடங்களுக்கு விஜயத்தை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களை உரிய படையணிகளின் கட்டளை அதிகாரிகள் வரவேற்றனர்.

16வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ் சூரிய பண்டார அவர்கள் அவரை வரவேற்றதொடு அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது.மேலும் அவருக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் விஜயத்தை மேற்கொண்ட படையணியின் படைத் தளபதி படையினஉர் மத்தியில் உரையாற்றினார். பின்னர் அவர் முகாம் வளாகத்தில் தனது விஜயத்தின் அடையாளமாக மரக்கன்றினை நட்டார்.

அதேபோல் அவர் நெல்லியடியிலுள்ள 4 வது இலங்கை சிங்க படையணி, பரந்தனிலுள்ள 6 வது இலங்கை சிங்க படையணி, புதுக்குடியிருப்பிலுள்ள 9 வது இலங்கை சிங்க படையணி உள்ளிட்ட படையணியகளுக்கு தனது விஜயத்தை 05 ஆம் திகதி மேற்கொண்டார். பின்னர் 9 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் லலித் எபா அவர்கள் வரவேற்றார் அதைத் தொடர்ந்து, படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது.படையணியின் கட்டளை அதிகாரி அவருக்கு முறையான விளக்கத்தை வழங்கினார்.

படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் மரக்கன்றினை நட்டதோடு குழுபுகைகடத்திலும் கலந்து கொண்டார் மேலும் முகாம் வளாகத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதோடு அதிதிகள் புத்தகத்தில் சில குறிப்புக்களையும் எழுதினார்.

பின்னர் 6 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை கட்டளை அதிகாரி மேஜர் முஹேந்திரம் அவர்கள் வரவேற்றார் அதனைத் தொடர்ந்து, படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது.

கட்டளை அதிகாரி பட்டாலியனின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக விஷயங்கள் குறித்து விளக்கக்காட்சியை நடத்தினார். படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் மரக்கன்றினை நட்டார்.

அதேபோல், மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் , புத்துக்குடியிருப்புவில் உள்ள 14 பட்டாலியன் இலங்கை சிங்க படையணி ,அலம்பிலில் உள்ள 24 வது பட்டாலியன் இலங்கை சிங்க படையணி மற்றும் ஆன்டாங்குளத்திலுள்ள 5 வது( தொண்) பட்டாலியன் இலங்கை சிங்க படையணி உள்ளிட்ட இடங்களுக்கு புதன்கிழமை (06) விஜயத்தை மேற்கொண்டார்.

14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் அத்துல தொரஆராச்சி, 24வது பட்டாலியன் இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டின்ன் கேணல் ஆர் ரொட்ரிகோ, 5வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர் அதாவுத ஆகியோர் விஜயத்தை மேற்கொண்ட படையணியின் படைத் தளபதியை வரவேற்றனர். பின்னர் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டதோடு படையினர் மத்தியில் உரையாற்றுதல், மரம் நடல் குழுப்புகைப்படம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. latest Running Sneakers | NIKE HOMME