19th January 2021 18:10:57 Hours
இராணுவ தலைமையகத்தில் பதவி நிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரால் செனரத் பண்டார 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து விடைப்பெற்றுச் சென்றார். இதன்போது அவருக்கு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 12 வது கெமுனு ஹேவா படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரால் செனரத் பண்டார யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பதவியேற்றதிலிருந்து யாழ் தீபகற்பத்தின் பாதுகாப்பை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தல் முயற்சிகளை ஊக்குவித்தார்.
அதேபோல், யாழ்ப்பாணத்தில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்கான வறிய மக்களுக்காவும் பல்வேறு நலத்திட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார். அவர் கொவிட் – 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டார். பிரியாவிடையின் போது சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. தேனீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது. trace affiliate link | Nike Air Max