15th January 2021 17:45:05 Hours
ஓய்வுபெற்றுச் செல்லும் பொது சேவைகள் பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களுக்கு கொமாண்டோ படையணி தலைமையகத்தில் 2021 ஜனவரி 15 ஆம் இராணுவ சம்பிரதாய முறைப்டி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது.கணேமுல்லயிலுள்ள கொண்டோ படையணிபோர் வீர்ர்கள் நினைவுத்தூபிக்கு அவர் நினைவஞ்சலி செலுத்தினார்.
பின்னர், குழு புகைப்படம் எடுத்தல், படையினர் மத்தியில் உரையாற்றல் , மரம் நடவு, அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் அனைத்து படையினர்களுடனான மதிய உணவு விருந்துபசபரத்தில் கலந்து கொள்ளல் உள்ளிட்ட நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். அவர் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் , ஒப்படைக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாகச் செய்வதற்காக கொமாண்டோக்களாக உயர்ந்த மன மற்றும் உடல் தரங்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், கொமாண்டோ படையணியின் படைத் தளபதியாக இருந்த காலத்தில் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினரின் நல்ல நடத்தைக்கு அவர் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தார்.
மாலையில், ஓய்வுபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் கொமாண்டோ அதிகாரிகளின் உணவக அறையில் மூத்த அதிகாரிகளுடன் தங்கள் துணைவர்களுடன் இரவு விருந்துபசபரத்தில் கலந்து கொண்டார். பிரியாவிடை முடிந்ததும், மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களுக்கு மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களால் பாராட்டுக்கான அடையாள சின்னம் வழங்கப்பட்டது, திருமதி அனுஜா டி சில்வாவுக்கு திருமதி சுபாஷினி ராஜபக்ஷ அவர்களினால் பாராட்டுக்கான அடையாளமாக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. url clone | adidas