Header

Sri Lanka Army

Defender of the Nation

19th January 2021 13:23:04 Hours

புதிய வன்னி தளபதி கடமை ஆரம்பம்

22 வது வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார சனிக்கிழமை (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

விழாவின் முதல் அங்கமாக புதிய தளபதிக்கு வளாகத்தின் நுழைவாயிலில் 7 வது சிங்கப் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் இறந்த வீழ்ந்த போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் அவர் பதவியேற்பிக்கான முறையான ஆவணத்தில் தனது கையொப்பமிட்டார். வளாகத்தில் ஒரு மாகன்று நாட்டுதல், சிரேஸ்ட அதிகாரிகளுடனான குழு படமெடுத்தல், படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலைகளுக்கான தேனீர் விருந்து என்பவற்றில் பங்கேற்றார்.

கடமை பொறுப்பேற்றல் விழாவில் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர். url clone | Sneaker & Lifestyle News