Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2021 15:19:22 Hours

இராணுவத் தளபதி போர்க்களம் வெற்றிகளை நினைவு கூர்ந்து மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லாவுக்கு வாழ்த்து

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா புகழ்பெற்ற கஜாபா படையின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் சேனரத் நிவுன்ஹெல்லா மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலம் இராணுவத்திற்கும் நாட்டிற்கும் சேவையாற்றி இராணுவ வாழ்கையில் ஓய்வுபெறுவதையிட்டு இன்று (19) காலை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.

படைத் தளபதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்லாவின் அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலை பாராட்டினார், குறிப்பாக போர்க்களத்தில் கஜபா குடும்பத்தின் உறுதியான சிப்பாயாக, ஒரு சிரேஸ்ட அதிகாரியாக அவரது நேர்மை மற்றும் களங்கமற்ற தன்மையையும், இராணுவத்தில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக அவர் செய்த பங்களிப்பையும் பாராட்டினார்.

இராணுவத்தில் துப்பாக்கி சுடும் போட்டியின் மேம்பாட்டிற்காக மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லாவின் பங்கை இராணுவத் தலைவர் பாராட்டினார். மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லா, இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரி முதல் இன்றுவரை துப்பாக்கிச் சூட்டில் சாம்பியன்ஷிப் சாதனையைப் பராமரித்து வருகிறார். அத்தோடு இராணுவ சிறு ஆயுதக் கழகத்தின் தலைவராவார்.

இச்சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா போர்க்கள நினைவுகளை நினைவு கூர்ந்தார் , 1998 ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கில் 'திரிவித பலய' மற்றும் அமைதிக்கான போரின் உச்சக்கட்டம் வரை அனைத்து முக்கிய நடவடிக்கைகளில் அவர் அளித்த வீர பங்களிப்பை பாராட்டினார், கடமைகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடருவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று இராணுவத் தளபதி கருத்து தெரிவித்தார். பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளை மேற்கொள்வதற்கு நாடு தயாராக உள்ள ஒரு நேரத்தில் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு இராணுவத் தளபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் அன்பான விருப்பங்களுக்கும் சிந்தனைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். சந்திப்பின் முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.

மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லா, மனித வள நிர்வாகம் பணிப்பகத்தின் பணிப்பாளர், மதுரு ஓய இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி, 23வது படைப்பிரிவு தளபதி போன்ற பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். Mysneakers | Nike SB