Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2021 13:30:19 Hours

இதுவரை 53,749 தொற்றாளர்கள்

இன்று (19) காலை வரையில் இலங்கையில் புதிய கொவிட் – (19) தொற்றாளர்கள் 674 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் 47 பேர் ஆவர். ஏனைய 627 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் அதிக கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 197 பேர் ஆகும். மேலும் கம்பஹா மாவட்டம் 165 பேர் மற்றும் 54 பேர் குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏனைய 211 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று (19) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,879 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 43,062 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 19 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 53,749 ஆகும். அவர்களில் 45,819 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று 19 ஆம் திகதி வரை 7,660 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (19) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 649 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (19) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 06 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்கள், வட களுத்துறை, கொழும்பு 15, மோதர, கொழும்பு 03, தெஹிவளை, மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதற்கமைய இன்று காலை (18) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 270 ஆகும்

இன்று (19) காலை சவுதி அரபியாவில் இருந்து EY 264 விமான ஊடாக 33 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 22 பயணிகளும் MU 713 சீனாவில் இருந்து விமான ஊடாக 39 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அதேபோல் இன்று (19) கட்டாரில் இருந்து UL 102 விமானம் மூலம் 84 பயணிகளும், இந்தியாவில் இருந்து AI 273 விமானம் மூலம் 25 பயணிகளும், உக்ரெயினில் இருந்து PQ 555 விமானம் மூலம் 105 பயணிகளும், சவுதி அரபியாவில் இருந்து EK 648 விமானம் மூலம் 75 பயணிகளும், சிங்கப்பூரில் இருந்து SQ 468 விமானம் மூலம் 23 பயணிகளும் இலங்கை வருகை தரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (19) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 92 தனிமைப்படுத்தல் மையங்களில் 8,198 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (18) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 14,984 ஆகும். url clone | Nike Dunk - Collection - Sb-roscoff