Header

Sri Lanka Army

Defender of the Nation

15th January 2021 16:55:05 Hours

மேலும் நான்கு மரணங்கள் பதிவு - கொவிட் மையம் தெரிவிப்பு

இன்று (16) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 695 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையர் 08 பேரும், வெளிநாட்டவர்கள் 04 பேர் ஏனைய 683 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் கம்பஹா மாவட்டத்தில் 168 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 147 பேர், கண்டி மாவட்டத்தில் 90 பேர், நாடு முழுவதுமாக 278 பேர் இனங்காணப்பட்டவர்கள் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று (16), காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,788. பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 41,501 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) (சகலரும் சுகடைந்துள்ளனர்) கொழும்பு மீன் சந்தை கொத்தணி (38,442)

அதன் பிரகாரம் 16 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,596 ஆகும். அவர்களில் 44,258 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (16) ஆம் திகதி வரை 7,083 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (16), 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 512 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று காலை (16) மணிவரையில் இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக 04 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்கள் நவலப்பிட்டி, கொழும்பு 15, கிரிபத்கொட மற்றும் கொழும்பு 10 ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் ஆவர், அதன்படி, இலங்கையில் கொவிட் - 19 நோய்த் தொற்று காரணமாக மொத்த இறப்புகளின் எண்ணிக்கை இன்று (16) காலை வரை 255 ஆக உயர்ந்துள்ளது. இன்று (16), காலை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து EY 264 விமான ஊடாக 50 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 45 பயணிகளும், மாலைத்தீவில் இருந்து Q 226944 விமான ஊடாக 50 பயணிகளும், இந்தியாவில் இருந்து 6E 9031 விமான ஊடாக 23 பயணிகளும், இந்தியாவில் இருந்து UL 1026 விமானம் ஊடாக 40 பயணிகளும் வருகை தந்துள்ளனர். அதேபோல் (16) ஆம் திகதிக்குள் இந்தியாவில் இருந்து ICF விமானம் மூலம் 14 பயணிகள், மாலைத்தீவில் இருந்து UL 102 விமானம் மூலம் 30 பயணிகள், பாகிஸ்தானில் இருந்து UL 184 விமானம் மூலம் 05 பயணிகளும், இந்தியாவில் இருந்து IFC 321 விமானம் மூலம் 14 பயணிகளும், மாலைத்தீவில் இருந்து UL 102 விமானம் மூலம் 30 பயணிகளும், பாகிஸ்தானில் இருந்து UL 184 விமானம் மூலம் 05 பயணிகள், இந்தியாவில் இருந்து UL 196 விமான மூலம் 03 பயணியகளும், துருக்கியில் இருந்து TK 730 விமான மூலம் 15 பயணியகளும், சீனாவில் இருந்து UL 867 விமான மூலம் 06 பயணியகளும், ஓமானில் இருந்து WY 373 விமான மூலம் 30 பயணியகளும், ஜேர்மனியில் இருந்து UL 554 விமான மூலம் 12 பயணியகள் இலங்கை வருகை தரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (16) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 80 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,536 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (15) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 15,146 ஆகும். Authentic Nike Sneakers | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet