15th January 2021 17:05:05 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 653 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக கர்னல் சுதந்த பொன்சேகா புதன்கிழமை (13) பாலம்பிட்டியில் உள்ள 653 வது பிரிகேட்டின் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
653 பிரிகேட்டின் புதிய தளபதியினை பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன் 24 வது கஜபா இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் முன்னிலையில் தனது கடமையேற்பிக்கான முறையான ஆவணத்தில் கர்னல் சுதந்த பொன்சேகா கையொப்பமிட்டார்.
பின்னர், நிகழ்வின் ஞாபகார்த்தமாக முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி வைத்தார். பிரிகேட் கட்டளையின் கீழுள்ள அலகுகளின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர். 24 வது கஜபா படையின் கட்டளை அதிகாரி, பிரிகேட் பணியாளர்கள் மற்றும் அனைத்து படையினருடனான தேநீர் விருந்தில் பங்கு கொண்டார். அத்தோடு நாளின் நிறைவு அம்சமாக படையினருக்கான உரை இடம்பெற்றது.
பிரிகேடியர் சங்க ஜயமஹா 583 வது பிரிகேட் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் கேணல் சுதந்த பொன்சேகா குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். bridge media | nike fashion