Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2021 08:30:54 Hours

மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் இந்து சமரகோன் பதவியேற்பு

கொழும்பு 2 இல் அமைந்துள்ள இலங்கை மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படை தலைமைகைத்தின் 10 வது படைத் தளபதியாக செவ்வாய்க்கிழமை (12) பிரிகேடியர் இந்து சமரகோன் பொறுப்பேற்றார்.

அவர் தனது புதிய நியமனத்திற்கு மேலதிகமாக இராணுவ தலைமையகத்தின் மின்னியல் மற்றும் இயந்திரவியல் பணிப்பகத்தின் பணிப்பாளராகவும் பதவி வகிக்கின்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதியினை நிலையத் தளபதி பிரிகேடியர் நிலம் ஹெரத் வரவேற்றார். தெடர்ந்து இராணுவ மரபுகளுக்கு ஏற்ப படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன.

இதன்போது அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்து என்பன இடம்பெற்றது. புதிய படைத் தளபதிக்கு வாழ்த்து தெரிவிக்க சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பிரசன்னமாகியிருந்தனர். jordan release date | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp