Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2021 13:23:19 Hours

கடந்த 24 மணித்தியாலயத்தில் மேலும் பலர் இலங்கைக்கு வருகை

இன்று (18) காலை வரையில் இலங்கையில் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 763 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் 14 பேர் ஆவர். ஏனைய 749 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் அதிக கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 241 பேர் ஆகும். மேலும் கம்பஹா மாவட்டம் 210 பேர் மற்றும் 41 பேர் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏனைய 257 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று (18) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,252 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 42,413 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 (சகலரும் சுகடைந்துள்ளனர்) கொழும்பு மீன் சந்தை கொத்தணி 39,354

அதன் பிரகாரம் 18 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 53,075 ஆகும். அவர்களில் 45,170 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று 18 ஆம் திகதி வரை 7,641 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (18) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 425 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (18) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 08 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்கள், கொலனாவை, பொரல்ல, உடபுஸ்ஸலாவை, கோகலை, தெகிவலை, பொலனறுவை, கொழும்பு 08, மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதற்கமைய இன்று காலை (18) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 264 ஆகும்.

இன்று (18) காலை சவுதி அரபு நாட்டில் இருந்து UL 1264 விமான ஊடாக 75 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 29 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அதேபோல் இன்று (18) மாலைத்தீவில் இருந்து UL 102 விமானம் மூலம் 09 பயணிகளும், சீனாவில் இருந்து MAGAN 292 விமானம் மூலம் 12 பயணிகள், பகிஸ்தானில் இருந்து UL 184 விமானம் மூலம் ஒருவரும், பகிஸ்தானில் இருந்து UL 186 விமானம் மூலம் 06 பயணிகளும், குவைட்டில் இருந்து UL 230 விமானம் மூலம் 297 பயணிகள் இலங்கை வருகை தரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (18) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 83 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,173 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (17) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 15,218 ஆகும். Best jordan Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1