18th January 2021 11:43:14 Hours
ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையக ஊடக பணியகத்தின் புதிய பணிப்பாளராக இராணுவ பீரங்கி படையணியின் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்கள் இன்று 19 ஆம் திகதி காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பணியகத்தின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தனது பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனை தொடர்ந்து பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன், மகா சங்கத்தினரால் அட்டபிரிகர வழங்குதல் மற்றும் குழு புகைப்படம் எடுத்தல் என்பனவும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் முன்னாள் இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, ஊடக ஆலோசகர் திரு சிசிர விஜேசிங்க, ஊடக பணியகத்தின் கேணல் ஊடகம் கேணல் விஜித ஹெட்டியாராச்சி, ஊடக பணியகத்தின் கேணல் ஊடகம் (மேலதிக) கேணல் விஸ்வஜித் வித்தியானந்த, ஊடக பணியகத்தின் கேணல் (சட்டம்) கேணல் புத்திகா பேடிணேன்டஸ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப்பிரிவின் 551 ஆவது பிரிகேட்டின் தளபதியாக சேவையாற்றிய பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்கள் தற்போது இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராக கடமை ஏற்றுள்ளார்.
கண்டியில் பிறந்த பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அவர்கள், 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதோடு 1992 இல் தியதலவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சியினை நிறைவு செய்துக் கொண்டதன் பின்னர் இரண்டாம் லெப்டின்னாக நியமிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா கலிபோர்னியா, கடற்படை முதுகலைமானி கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வுகளை பட்டத்தை பெற்றதுடன், இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பயின்ற போது இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். மேலும் அவர் இந்தியாவில் இளம் அதிகாரிகளுக்கான பாடநெறியையும் பாகிஸ்தானில் பீரங்கியாளர் உயர் கற்கை நெறியையும் நிறைவுசெய்துள்ளார்.
இவரின் முன்னைய நியமனங்களில் 6 ஆவது இலங்கை கள பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்றுவிப்பதிகாரியாகவும், 211 ஆவது பிரிகேட்டின் பிரிகேட் மேஜராகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கற்கை நிலைய பதவி நிலை அதிகாரி, 16 ஆவது இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பொது நிர்வாக அதிகாரி 1, இராணுவத் தளபதி சேவைகள் உதவி அதிகாரி (2011-2013), பாதுகாப்பு பதவி நிலை பிரதானியின் செயலாளர் (2013-2014), 16 ஆவது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி , இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் பிரதம பயிற்சி அதிகாரி போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும், மேற்கு சகாரா ஐக்கிய நாடுகள் சபை (2008 -2009) இராணுவ அவதானிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது இராணுவ வாழ்க்கையில் ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவை பதக்கம் ஆகியவை பெற்றதுடன் ‘The Impact of Changing External Conditions on Counter Insurgency: The Sri Lankan Experience’ என்ற நூலின் நூல் ஆசிரியரும் ஆவார். Running Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth