15th January 2021 17:00:05 Hours
ஓய்வுபெற்றுச் செல்லும் இலங்கை சமிக்ஞை படையணியின் 13 வது படைத் தளபதியும் 56 வது இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது பனாகொடையிலுள்ள இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் வியாழக்கிழமை14 ஆம் திகதி இடம்பெற்றது.
அங்கு வருகையினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய அவர்களை இராணுவ சம்பிரதாய முறைப்படி நிலையத் தளபதி கேணல் அஷோக்க குணசேகர அவர்கள் வரவேற்றதொடு அவருக்கு படையணி தலைமையக நுழைவாயிலில் இராணுவ மரியாதையளிக்கப்பட்டது.
பின்னர் அவர் உயிர் நீத்த படைவீரர்களின் நினைவுத்தூபிக்கு நினைவஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது. பின்னர் பிரிவிலுள்ள படையினர் மத்தியில் நேரடி வெப்தளமூலம் உரையாற்றியதோடு அனைத்து அதிகாரிகள மத்தியில் வெவேறாக உரையாற்றினார். பின்னர் அவரின் சேவினை பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
அதன்பிறகு, படையணி தலைமையக வளாகத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த படையணியின் படைத் தளபதிக்கு இலங்கை சமிக்ஞை படையணியின் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் மரியாதை செலுத்தினர். Adidas footwear | 『アディダス』に分類された記事一覧