15th January 2021 18:01:29 Hours
தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியில் உள்ள காந்தசாமி கோவிலில் இந்து மத சம்பிரதாய முறைப்படி பொங்கள் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இப் பண்டிகையானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜிவ செனரத் யாப்பா அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கோவிலின் தலைமை குருக்கள் ஜெகதீஷ்வரன் மற்றும் ஏனைய குருக்களின் பங்கேற்புடன் 57 ஆவது படைப் பிரிவின் படையினரின் அனுசரனையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மத நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், ஏனைய அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் 14 ஆம் திகதி வியாழக்கிழமை தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வட்டப்பலை கண்ணகி அம்மன் கோவிலில் இந்து மத சம்பிரதாய நிகழ்வுகளை நடத்தினர். இந்த நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்றன.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மலிகதீவு பிரதேசத்தில் வசிக்கும் திருமதி செம்பகுட்டி பாக்கியாம் அவர்களுக்காக புதிதாக நிர்மானிக்கப்பட்ட புதிய வீட்டை முல்லைத்திவு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் திறந்து வைத்தார். இந்த வீட்டின் நிர்மானிப்பு பணிகள் 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் மேற்பார்வையில் 682 ஆவது பிரிகேடில் உள்ள 6 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மேற் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப இடம்பெற்றதுடன், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஏனைய அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர். Buy Kicks | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!