Header

Sri Lanka Army

Defender of the Nation

15th January 2021 16:27:38 Hours

இராணுவ புலனாய்வு படையணி வளாகத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

'இராணுவ புலனாய்வு இல்லத்தின்' புதிய உள்கட்டமைப்பு வளர்ச்சியின் விரிவாக்கம் மற்றும் கரந்தெனியவில் உள்ள இராணுவ புலனாய்வுப் படையணி தலைமையக வளாகத்திற்குள் உள்ள இராணுவ புலனாய்வு பயிற்சிப் பாடசாலையில் நன்கு பொருத்தப்பட்ட பிரதான கட்டிடமானது இன்று (15) பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு வருகை தந்ந ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறையின் பிரகாரம் காவலர் வாக்குப்பதிவு இடம்பெற்றதோடு இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியும் இராணுவத் தலைமைகயகத்தின் உபகரண மாஸ்டர் ஜெனரலுமான மேஜர் ஜெனரல் ஷாந்த ஹேவவிதாரன அவர்களினால் வரவேற்கப்பட்டார். பின்னர் வண்ணமயமான உடையணிந்த இராணுவ புலனாய்வு படையணியின் படையினரால் அவருக்கு அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது.

பின்னர் பிரதம அதிதியினால் மரக்கன்று நடப்பட்டதோடு, இராணுவ புலனாய்வு படையணியின் வகிபாகம் மற்றும் நீண்டகாலமாக வெளிநாட்டு இராணுவ பயிற்சியாளர்களை கூட ஈர்க்கும் புதிய இராணுவ புலனாய்வு பயிற்சி பாடசாலையின் புதிய பாடத்திட்டம் தொடர்பாகவும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் அன்றைய பிரதம அதிதி புதிய இராணுவ புலனாய்வு பயிற்சி பாடசாலையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்ததோடு, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அதனை பார்வையிட்டார்.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியின் உரை, இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியின் வரவேற்புரை மற்றும் இராணுவ புலனாய்வு பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் பிரபொட சிறிவர்தன அவர்களின் விளக்கமளிப்பு இடம்பெற்றதோடு குழுப்புகை படம் எடுத்தல், அதிதிகள் புத்தகத்தில் ஒப்பமிடல் அதிதிக்கான நினைவுச் சின்னம் வழங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் குருநகரில் ஒரு சிறிய புலனாய்வுக் குழுவாக நிறுவப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு, பின்னர் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ ஏற்பாடுகளுக்கு ஏற்ப நாட்டின் சிறந்த நலன்களுக்காக 1990 ஜூன் 28 அன்று இராணுவ புலனாய்வுப் படையாக எழுச்சிபெற்றது. அதன் படையணித் தலைமையகம் பின்னர் 1993 ஜனவரி 25ஆம் திகதி நிறுவப்பட்டது மற்றும் எட்டு பிரிவுகளை கொண்டுள்ளது, இது 'நென ரண ஜய' (புலனாய்வுடன் போர்க்கள வெற்றி) மகுடவாசகம் மற்றும் அதன் இராணுவ புலனாய்வு பயிற்சி பாடசாலை ஆகியவை இணையான பயிற்சி நிறுவனமாக செயல்படுகின்றன.

இராணுவ புலனாய்வு பயிற்சி பள்ளி 2009 பெப்ரவரி 10 ஆம் திகதி தற்காலிகமாக மதுகம பெலவத்த பகுதியில் அமைக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது 2020 மே 18 அன்று கரந்தெனியவிலுள்ள உள்ள இராணுவ புலனாய்வு படையணித் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது, பின்னர் இராணுவத்தின் தற்போதைய தளபதி எடுத்த முயற்சியின் பேரில் இது இராணுவ செயல்பாட்டு மறுவாழ்வு திட்டத்திற்கு ஏற்ப இராணுவ புலனாய்வு மையத்துடன் இணைந்துள்ள 7 ஏக்கர் நிலத்திற்குள் முறையாக அமைக்கப்பட்டது. தற்போது வரை, இராணுவ பயிற்சி பாடசாலையானது இராணுவத்தில் உளவுத்துறை தொடர்பான அனைத்து தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, இலங்கை பொலிஸ், இலங்கை சுங்க, சிறைச்சாலைத் துறை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இன்று (15) திறக்கப்பட்ட புதிய வசதி வளாகத்தின் முதல் கட்டிடம் வெவ்வேறு தரப்பினருக்கான இத்தகைய பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியங்களை மேலும் விரிவுபடுத்தும்.

குறித்த முழு திட்டத்தில் இரண்டு மாடி ஆய்வுக் கட்டிடம், மூன்று மாடி மாணவர் தங்குமிடக் கட்டிடம், ஒரு மூத்த ஆணைபெறாத அதிகாரிகள் தங்குமிடக் கட்டிடம், மேலும் பயிற்சியின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு படையணியின் அனைத்து ஆணைபெற்த அதிகாரிகளுக்கான மற்றொரு இரண்டு மாடி விடுதி கட்டிடம் ஆகியவை உள்ளடங்கும். எதிர்காலத்தில், அதிகாரிகளின் உணவறை, ஆணைபெற்ற அதிகாரிகளின் இரு மாடிக் கட்டிடம், கேட்போர்கூடம் மற்றும் நலன்புரி கட்டிடம் ஆகியவற்றை வளாகத்திற்குள் நிர்மானிக்கும் திட்டங்கள் உள்ளன.

குறித்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் பலர் கலந்து கொண்டனர். Nike sneakers | 『アディダス』に分類された記事一覧