14th January 2021 09:00:54 Hours
இன்று (15) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் -19 தொற்றாளர்கள் 670 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்களாவர்.அவர்களில் 214 பேர் கொழும்பு மாவட்டம், 116 பேர் கம்பஹா மாவட்டம், 90 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 250 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (15) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47105 பேர் ஆகும். அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) மற்றும் மீன் சந்தை கொத்தணியில் (37930) இருந்து மொத்தமாக 40989 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் (15) ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 50901 ஆகும். அவர்களில் 43746 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6904 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (15) கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 480 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் தும்மலசூரிய, கொழும்பு 13, கல்கமுவை மற்றும் கின்தோட்டை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அந்த வகையில் இன்று காலை(15) ம் திகதி வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 251 ஆகும்.
இன்று காலை (15) ஜப்பானில் இருந்து UL 455 விமானம் ஊடாக 37 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 28 பயணிகளும் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமானத்தினூடாக 44 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து UL 554 விமானம் ஊடாக 8 பயணிகளும் மாலைதீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 6 பயணிகளும் இத்தாலியில் இருந்து UL 1208 விமானம் ஊடாக 31 பயணிகளும் உக்ரைனில் இருந்து PS 6385 விமானம் ஊடாக 80 பயணிகளும் பங்களாதேஷில் இருந்து UL 190 விமானம் ஊடாக 7 பயணிகளும் துருக்கியில் இருந்து TK 730 விமானம் ஊடாக 8 பயணிகளும் மலேசியாவில் இருந்து UL 320 விமானம் ஊடாக 11 பயணிகளும் இருந்து UL 1206 விமானம் ஊடாக 119 பயணிகளும் ஓமானில் இருந்து UL 206 விமானம் மூலம் 290 பயணிகளும் எதியோப்பியாவில் இருந்து ET 8602 விமானம் மூலம் 70 பயணிகளும் ஐக்கிய அமேரிக்காவில் இருந்து KQ 228 விமானம் மூலம் 43 பயணிகளும் மற்றும் சிங்கப்பூரில் இருந்து SQ 468 விமானம் மூலம் 17 பயணிகளும் இன்று வருகைதரவுள்ளனர். வருகை தந்த அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை (15) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 81 தனிமைப்படுத்தல் மையங்களில் 6790 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (14) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 14565 ஆகும். buy shoes | adidas Yeezy Boost 350