14th January 2021 07:30:54 Hours
இலங்கை பீரங்கி படையணியை சேர்ந்த பெருமைக்குறியவரும் கடின அர்பணிப்பு சேவையினை புரியும் படை வீரரான உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளையின் உபகரண மாஸ்டர் நாயகமும் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷாந்த ஹேவவிதாரன அவர்கள் தான் ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை செவ்வாய்க்கிழமை 12 ஆம் திகதி மாலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்தில் மற்றும் இலங்கை பீரங்கி படையணியில் 32 வருடத்திற்கும் மேலான இராணுவச் சேவையில் பல முக்கிய நியமனங்களை வகித்த மேஜர் ஜெனரல் ஷாந்த ஹேவவிதாரன அவர்களுடன் ஓய்வுபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டு இராணுவ புலனாய்வு தலைமையில் இருந்து புரிந்த பங்களிப்புக்காக அவரைப் பாராட்டினார்.
வெளியேறும் மூத்த அதிகாரி தனது தளபதிகளின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தலைவரிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். உரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரியை பாராட்டும் முகமாக அவருக்கு சிறப்பு நினைவு சின்னம் வழங்கப்பட்டதோடு . அவரினால் இராணுவத் தளபதிக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது latest Running Sneakers | Nike