Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2021 18:01:55 Hours

“சிறந்த வகை பொருட்ளில் மிகவும் சிறந்தவையை இராணுவ வீரர்களுக்கு வழங்குங்கள்”- இராணுவத் தளபதி வழங்குனர்களிடம் தெரிவிப்பு

இராணுவத்தின் விணியோகம் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் ஏற்பாட்டில் புதிய உணவு வகைகள் மற்றும் உலர் உணவு வகைளை இராணுவத்திற்கு வழங்குவது தொடர்பான விஷேட கலந்துரையாடலானது வழங்குனர்கள் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோருக்கிடையில் இராணுவத்த தளபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது.

நொப்கோவின் தலைவரான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவத்திற்கு தடையின்றி புதிய உணவுப் பொருட்களை மற்றும் ஏனைய உலர்ந்த வகை பொருட்களை கொவிட்-19 தொற்றுநோய்க்கு முகம்கொடுத்து மற்றும் ஊரடங்கு உத்தரவு, திடீர் பூட்டுதல் மற்றும் தனிமைப்படுத்தும் நடைமுறைகள் போன்ற பிற சவால்களுக்கு மத்தியில் இராணுவத்திற்கும் மற்றும் .நாடு முழுவதும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் வழங்கியமையை பாராட்டினர்.

"நீங்கள் அனைவரும் எப்போதும் சிறந்த வகை பொருட்ளில் மிகவும் சிறந்தவையை எங்கள் வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும் கோவிட் -19 ஒழிப்பு, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் மற்றும் ஏனைய மனிதாபிமான சேவைகளுக்கான அவர்களின் 24 மணிநேர ஒப்பற்ற அர்ப்பணிப்பை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 2021 ஆம் ஆண்டில், உங்கள் சேவையை சிறந்த தரத்தில் நீங்கள் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நான நம்புகிறேன், "என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவ சேவை படையணி வழங்குனர்களிடமிருந்து சேமிப்பிற்காக மாதாந்திர நுகர்வுக்காக இதுபோன்ற பங்குகளை எடுத்துக் கொண்டாலும், எதிர்பார்த்த தரம் இல்லாதது நிச்சயமாக சில நாட்கள் கழித்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தி பொருட்கள் வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அங்கீகரிக்கப்பட்ட அளவுகள் சேமிப்பகங்களில் உள்ள அளவுகளுடன் ஒத்திருக்க வேண்டும், இதனால் பரிந்துரைக்கப்பட்ட விவரக்குறிப்புகளுக்கு ஏற்ற உலர்ந்த உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது என இராணுவத் தளபதி விரிவாகக் கூறினார்.

இராணுவ தலைமையகத்தில் உள்ள விணியோகம் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷ வனிகசேகர, 14 இராணுவ உணவு (உலர் மற்றும் புதிய) வழங்குனர்கள் , இலங்கை இராணுவ சேவை படையின் அனைத்து பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகள், சுதந்திர வழங்கள் நிலையத்தின் தளபதி குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Sportswear Design | Nike