15th January 2021 16:40:05 Hours
இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கொமடோ மொஹமட் ஷபியுல் பாரி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை புதன்கிழமை (13) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
குறித்த கலந்துரையாடலில் ஏற்கனவே பங்களாதேஷ் மற்றும் இலங்கை இராணுவத்தில் இடையில் நிலவும் இருதரப்பு உறவுகள் குறித்தும், பங்களாதேஷ் இராணுவத்தால் ஏற்கனவே முன்னெடக்கப்ட்டதற்கு மேலதிகமாக இலங்கையில் முப்படைவீரர்களுக்கான பயிற்சி தொகுதிகள் மூலம் இராணுவ அமைப்புகளுக்கும் மேலதிக முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பெரும்பாலும் கவனம் செலுத்தப்பட்டன.
பங்களாதேஷ் இராணுவத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இராணுவத்திற்கு விரிவுபடுத்தப்பட்ட புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் ஜெனரல் சில்வா அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதோடு எதிர்காலத்தில் பயிற்சித் துறையில், போலிப் பயிற்சிகள் போன்றவற்றில் இதுபோன்ற உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல்களின் முடிவில், அவர்கள் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் வருகை தந்த கொமடோ இலங்கையில் கொவிட்-19 இன் நிலை குறித்து இராணுவத் தளபதியிடம் விசாரித்தார். Running Sneakers | Women's Nike Superrep