10th January 2021 19:22:47 Hours
இன்று (11) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் -19 தொற்றாளர்கள் 543 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களும் ஏனைய 536 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 217 பேர் கொழும்பு மாவட்டம், 85 பேர் கம்பஹா மாவட்டம், 40 பேர் ரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 194 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (11) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44596 பேர் ஆகும். அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) மற்றும் மீன் சந்தை கொத்தணியில் (35508) இருந்து மொத்தமாக 38567 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் (11) ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 48382 ஆகும். அவர்களில் 41324 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (11) கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 487 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலை, ரத்னபுரி மற்றும் கொழும்பு 14 அகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அந்த வகையில் இன்று காலை(11) ம் திகதி வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 232 ஆகும்.
இன்று காலை (11) சவுதி அரேபியாவில் இருந்து UL 1264 விமானம் ஊடாக 100 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 81 பயணிகளும் ஜக்கிய அரபு அமீரகத்தில் இருந்து UL 208 விமானம் ஊடாக 290 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மாலைதீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 36 பயணிகளும் பாக்கிஸ்தானில் இருந்து UL 184 விமானம் ஊடாக 2 பயணிகளும் துருக்கியில் இருந்து TK 730 விமானம் ஊடாக 2 பயணிகளும் பாக்கிஸ்தானில் இருந்து UL 186 விமானம் ஊடாக 4 பயணிகளும் மற்றும் ஜேர்மனியில் இருந்து UL 554 விமானம் ஊடாக சில பயணிகளும் இன்று வருகைதரவுள்ளனர். வருகை தந்த அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை (11) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் மையங்களில் 5961 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (10) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 16206 ஆகும். latest jordan Sneakers | Men's Footwear