05th January 2021 12:08:43 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப் பிரிவு தலைமையகத்தில் சேவையாற்றும் பத்வி-பரக்ரமபுர மைத்ரீ மவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு சிவில் ஊழியரின் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய சுகாதார வசதிகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு, 62 வது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் அதனை நிர்மாணித்துக் கொடுத்தார்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது படைப் பிரிவின் படைத் தளபதி அந்த இடத்தை பார்வையிட்டதுடன், 7 வது இலங்கை படைக்கலச் சிறப்பணியின் லான்ஸ் கோப்ரல் டி.ஷெல்டன் தலைமையிலான சிவில் பணியாளர் மற்றும் இராணுவ படையினரின் சில குடும்பத்தினருடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பயனாளி இரண்டு மகள்களின் தந்தை மற்றும் பல ஆண்டுகளாக அங்கு வேலை செய்கிறார் என்பதோடு குறித்த வீடானது சனிக்கிழமை (2) திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டது. Authentic Sneakers | Nike Off-White