01st January 2021 18:30:58 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ரணசிங்க அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் வெள்ளிக்கிழமை (1) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
அவர் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று திடீரென அதிகரிப்பது குறித்து மாவட்ட செயலாளர் திரு கே கருணாகரனுடன் கலந்துரையாடினார். மாவட்ட செயலாளருடனான சந்திப்பின் போது தளபதி 231 பிரிகேட் தளபதி கேணல் பிரதீப் கமகே அவர்களும் படைப் பிரிவின் படைத் தளபதியவர்களுடன் இணைந்து கொண்டார்.
அதேவேளை மேஜர் ஜெனரல் தம்மிக்க ரணசிங்க அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதோடு கொவிட்-19 தொடர்பாக பங்குதாரர்களுடன் கலந்துரையாடினார்.மாவட்ட செயலாளர் திரு கே கருணாகரன், மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் எல் வீஜேசேன , மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் எஸ் சிறிகாந்த் ,231 வது பிரிகேட் தளபதி கேணல் எஸ்பிஜி கமகே , மட்டக்களப்பு பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டி.வி குணராஜசிங்கம்,பிரதி பிராந்தி பணிப்பாளர்டொக்டர் அச்சுதன், பதில் மருத்துவ அதிகாரி டொக்டர் தர்ஷனி கந்தரூபன், பிரதந்திய மருத்துவ அதிகாரி டொக்டர் இ.சிறிநாத் ,திட்டமிடல்மேலதிக பணிப்பாளர் ஆர் ஜதீஸ்குமார், சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் டொக்டர் மௌரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் கே கனேசலிங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Buy Sneakers | balerínky