08th January 2021 14:24:11 Hours
சிங்கப்பூரில் உள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் காலே உதித்த தேரர், வணக்கத்திற்குரிய பலங்கொட புத்தகோஷா தேரர் மற்றும் சிங்கப்பூர் புத்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட அனுசரணையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் கொவிட்-19 தொற்று நோயின் காரணமாக பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி பகுதியில் உள்ள வரிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை 07 ஆம் திகதி 1000 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.இதற்கான ஒருங்கிணைப்பானது கிளநொச்சி பாதுகாப்பு ப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்வாதார வழிமுறைகள் இழப்பு காரணமாக கஷ்டங்களுக்கு உள்ளான குடும்பங்களை அடிப்படையாக கொண்டும் வரவிருக்கும் இந்து நம்பிக்கையின் தைப் பொங்கல் திருவிழாவை நடத்துவதற்கான ஊக்கமாகவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கிளநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட , 57வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத் யாப்பா, 571 மற்றும் 662 வது பிரிகேட் தளபதிகள், 9வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 20 வது பட்டாலியன் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரிகள் குறித்த பயனாளிகளின் வீட்டு வாசல்களுக்கு சென்று சுகாதார வழிகாட்டுதல்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கினர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொது பதவி நிலை கேணல் அனில் சோமவீர மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவில் விவகாரங்கள் லெப்டினன்ட் கேணல் எல்.கித்சிறி ஆகியோர் குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்ய நன்கொடையாளர்களுடன் ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். Running sneakers | Air Jordan Sneakers