08th January 2021 16:24:11 Hours
கோட்டை ஶ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள 306-சி 1 லயன்ஸ் கழக உறுப்பினர்கள் வில்பத்து வனப்பகுதியில் இராணுவத்தால் தொடங்கப்பட்ட மர நடுகை திட்டத்திற்கு ஒத்துழைக்கும் முகமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது படைப் பிரிவு படையினரின் ஒத்துழைப்புடன் ஞாயிற்றுக்கிழமை (3) ஸ்ரீநாத் நகரில் சுமார் 160 பெர்ச்சின் நிலப்பரப்பை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான அரிய மரக்கன்றுகளை நட்டனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 54 வது படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார அவர்கள் லயன்ஸ் கழக உறுப்பினர்களுடன் இணைந்து இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு நவ ரத்தக்' திட்டத்தின் 11 ஆம் கட்டமாக மர நடலினை தொடங்கினார்.
வில்பத்துவில் 2019 மே 18 ஆம் திகதி தொடங்கிய மரநடுகை திட்டத்தின் விரிவாக்கமாக 54 வது படைப் பிரிவின் சார்பாக 8 விஜயபாகு காலாட் படையணி மற்றும் 542 வது பிரிகேட் படைப் பிரிவு ஆகியவற்றின் படையினர் இணைந்து ஏற்பாடு செய்தனர்.கட்டம் 1 வெற்றிகரமாக 76.05 ஏக்கர் மரநடுகையின் மூலம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது மற்றும் நடந்துகொண்டிருக்கும் 11 ஆம் கட்டம் 2020 ஓகஸ்ட் 15 ஆம் திதி 251 ஏக்கர் பரப்பளவை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.கடந்த சில மாதங்களாக மலாபே ஹொரைசன் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் இதுவரை கல்லாறு பகுதியில் 12 ஏக்கரில் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன.
306-சி 1 லயன்ஸ் கழக நிதியுதவி உறுப்பினர்கள், மற்றும் அதன் தலைவர், 543 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன, மூத்த அதிகாரிகள், ஏனைய இராணுவ சிப்பாயினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் வனப்பகுதியின் ஸ்ரீநாத் நகரில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes